
மினுவாங்கொடை, ஜாபாலவத்த பிரதேசத்தில் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் மகசீன்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 2 தோட்டாக்கள், T - 56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 144 தோட்டாக்கள் மற்றும் 4 மகசீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து சந்தேக நபருக்கு கிடைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.