தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் மஹிந்தானந்த விமர்சனம்!

முக்கிய செய்திகள் 3

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை தேசிய பட்டியல் மூலம் நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் உத்தேசித்துள்ள வேட்பாளர் எவ்வாறு தேசியப்பட்டியல் ஊடாகநாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார் என தேர்தல்கள் ஆணைக்குழுவை குற்றஞ்சாட்டினார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தேசியப் பட்டியலில் இருந்து நியமனம் செய்யப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழு மௌனமாக உள்ளது என்றும் நாடாளுமன்ற முஜிபுர் ரஹ்மானை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.