மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகனம் மோதி விபத்து; தாய், மகன் காயம்

முக்கிய செய்திகள் 1

எல்ல - வெல்லவாய வீதியில் வெல்லவாய 7 ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (09) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 49 வயதுடைய தாயாரும் 18 வயதுடைய மகனும் படு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.