ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் – நாளை விவாதம்!

முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை சீராக்க அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேல்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Trending Posts