கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அருட்தந்தை ஒருவர் காயம் – சந்தேக நபர் கைது

முக்கிய செய்திகள் 1

மாத்தளை பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானமொன்றிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அருட்தந்தை ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (09) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான அருட்தந்தை மாத்தளை பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு பின்னர் ஆலயத்தை நோக்கி செல்வதற்காக தனது காரில் ஏற முற்படும் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான அருட்தந்தை காயமடைந்த நிலையில் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் மாத்தளை களுதாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கூரிய ஆயுதம் மற்றும் லொறி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கும் தாக்குதலுக்குள்ளான அருட்தந்தைக்கும் இடையில் உள்ள பண ஒப்பந்தம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.