மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்த பியூமி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

குற்றப்புலனாய்வு திணைக்கள சட்டவிரோத சொத்து விசாரணைப்பிரிவின் மூலம் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை உடனடியாக நிறுத்தக் கோரி பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த விசாரணையில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை என்றும் அதன் மூலம் தனக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பியூமி ஹன்சமாலி தனது மனுவில் கூறியுள்ளார்.

பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவருடைய வருமானம் தொடர்பில் சரியாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் சமூக செயட்பாட்டாளர் சஞ்சய மஹவத்த முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.