
தன்னுடைய அணுகுமுறைகளே தன்னைப் பல விடயங்களிலிருந்து மீண்டு வர உதவியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 20க்கு20 கிரிக்கெட் அணிக்குத் தலைமை தாங்கிய அவர், நேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ண 20க்கு20 போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி ஆரம்பத்திலேயே வெளியேறியது.
இது தொடர்பாகவும், மைதானத்தில் அவர் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகள், ஒழுக்கவீனங்கள் மற்றும் உணர்வு வெளிப்பாடுகள் தொடர்பிலும் அடிக்கடி விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள வனிந்து ஹசரங்க, தனது இந்த அணுகுமுறையே பல்வேறு சவால்களிலிருந்து மீண்டு வருவதற்குத் தமக்கு உதவியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.