
அரச உர நிறுவனங்கள் இரண்டு இன்று முதல் அமுலாகும் வகையில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கொமர்ஷல் மற்றும் லங்கா உர நிறுவனங்கள் அரச உர நிறுவனம் என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
அமைச்சு ஒன்றின் கீழ் ஒரு விடயதானத்துக்குள் இரண்டு நிறுவனங்கள் செயற்படுவதால் ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டதால், அங்குக் கடமையாற்றிய 400 பேரில் 273 பேர் சுயவிருப்பத்திற்கு அமைய ஓய்வு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.