1700 ரூபாய் சம்பளம் வழங்குமாறு கோரி நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

முக்கிய செய்திகள் 1

நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளை வலியுறுத்தி தலவாக்கலை, நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகள் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தாம் கடின உழைப்பை வழங்குகின்றபோதிலும் அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும், இந்நிலைமை தொடரக்கூடாதெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதேவேளை சனிக்கிழமை (13) தலவாக்கலை லோகி தோட்ட தொழிலாளர்களும் 1700 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending Posts