முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற முதியவர் திடீர் மரணம்! – மட்டக்களப்பில் சம்பவம்

முக்கிய செய்திகள் 1

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை இடம்பெற்றது.

பார் வீதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இந்த நபர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, நாவற்குடா பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Trending Posts