உடரட மெனிகே ரயில் சேவையில் தாமதம்

முக்கிய செய்திகள் 2

பண்டாரவளை ஹீலோயா ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த விரைவு ரயில் தடம் புரண்டமையினால் பதுளை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று (15) காலை முதல் வழமைக்கு திரும்பியது.

அதன்படி, இன்று (15) காலை 5.45 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த உடரட மெனிகே ரயில் இலக்கம் 1016, காலை 7.33 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை தனது பயணத்தை ஆரம்பித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் ஏனைய ரயில்கள் வழமையான கால அட்டவணையில் இயங்குவதாகவும், நேற்று (14) இரவு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த 1046 என்ற இரவு அஞ்சல் ரயில் இன்று காலை பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Trending Posts