புதையல் தோண்டிய 4 பேர் கைது

முக்கிய செய்திகள் 1

உஹன, திஸ்ஸபுர பிரதேசத்தில் புதையல் தோண்டிய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உஹன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் திஸ்ஸபுர மற்றும் ஜா - எல பிரதேசத்தை சேரந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டபோது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Trending Posts