கொழும்புக்கு அண்மையில் பஸ் விபத்து: 10 பேர் படுகாயம்

முக்கிய செய்திகள் 2

தலங்கம - கொஸ்வத்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர் .

காயமடைந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய 177 இலக்க பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இலக்கம் 190 மீகொட - புறக்கோட்டை மற்றும் இலக்கம் 177 கடுவெல - கொள்ளுப்பிட்டி பயணிக்கும் பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குளாகியது .

மீகொடயிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்து பத்தரமுல்லை தலாஹேனையை கடந்து பயணிக்கும் போது, ​​கடுவெலயிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற பேருந்து பின்னால் வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Trending Posts