போலி வைத்தியரை கைதுசெய்ய உத்தரவு

முக்கிய செய்திகள் 1

வைத்திய அனுமதிப்பத்திரமின்றி வைத்தியர் போல் வேடமிட்டு இரண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த நபரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல இன்று (15) உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைதுசெய்யவில்லையென பிள்ளைகளின் தந்தையின் சார்பில் தெரிவிக்கப்பட்ட வாக்குமூலத்தை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வெல்லம்பிட்டிவிலுள்ள தனியார் வைத்திய நிலையமொன்றில் சிகிச்சை அளித்த நபரையே இவ்வாறு கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending Posts