கெப் வாகன விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கெப் வாகன விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (15) காலை வெலிகந்த சிங்கபுர வீதியில் சிங்கபுரவிலிருந்து வெலிகந்த நோக்கி பயணித்த கெப் வண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் கெப் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 05 பயணிகள் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கபுர வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts