இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் பாடசாலை மாணவர்களுக்கானதாக அமைந்திருந்தது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.S.முரளிதரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (14.07.2024) நடைபெற்ற இப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் நீரியல்வளத் துறை அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா,
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் இணைத் தலைவரும் வடமாகாண ஆளுநருமாகிய திருமதி.பி.எஸ். எம். சார்ள்ஸ்,மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் ,ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண ஆளுநரின் செயலாளரும் கல்வி அமைச்சின் செயலாளருமாகிய திரு.நந்தகோபன்,மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.பிறட்லி,மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர் திரு.ஆயகுலன்,மற்றும் மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களின் கல்விப்பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள்,கிளிநொச்சி தெற்கு வலய அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாவட்டச்செயலக பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள்,மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது விசேட உரையானது காணொளி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து கருத்துரைகள் இடம்பெற்றன. கருத்துரைகளை தொடர்ந்து மாணவர்களுக்கான புலைமைப்பரிசில்கள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.