தலவாக்கலையில் 4 பாடசாலை மாணவர்கள் மாயம்

முக்கிய செய்திகள் 1

நேற்று முதல் காணாமல் போயிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பாடசாலை மாணவர்கள் தொடர்பான முறைப்பாடு ஒன்று நேற்று தங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை - க்றேட்வெஸ்டன் - லூசா தோட்டத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவரும், 16 வயதான 3 சிறுமிகளும் மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரையில் வீடு திரும்பவில்லை.

நேற்றுமுன்தினம் (14) காலை வீட்டிலிருந்து வெளியேறிய அவர்கள் நேற்று (15) காலை வரையில் வீடு திரும்பாத நிலையில் அவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேநேரம் காணாமல் போயிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரில் ஒரு சிறுமி அவரது பெற்றோருக்கு நேற்று பிற்பகல் தொலைபேசியில் தாம் நாவலப்பிட்டி பகுதிக்குச் செல்வதாகக் கூறியிருக்கிறார்.

இந்த தொலைபேசி அழைப்பு வந்த இலக்கத்தை அடிப்படையாக வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Trending Posts