
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனைக் கூறியுள்ளார்.