
கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர் 26 வயதுடைய எல்டப் மேற் பிரிவைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அந்தப் பகுதிக்கு சென்று தேடுதலை மேற்கொண்ட போது குறித்த நபரின் வீட்டுக்கு பின் புறத்தில் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் மில்லிலீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்தோடு கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பீப்பாய் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மீது வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.