நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞர் கைது

முக்கிய செய்திகள் 1

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தளுபத்த பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞர் ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 57.75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts