கொள்ளுப்பிட்டியில் புதுமணத் தம்பதிகள் பயணித்த கார் விபத்து!

முக்கிய செய்திகள் 1

புதுமணத் தம்பதிகள் பயணித்த கார் மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் கொள்ளுப்பிட்டியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (15) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மணமக்கள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மணமக்கள் பயணித்த காருக்கு முன்னால் சுமார் 15 வாகனங்கள் பம்பலப்பிட்டியில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்ததுடன், மணமக்கள் பயணித்த காரின் தடுப்பான் பழுதானதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Trending Posts