யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

முக்கிய செய்திகள் 2

வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

“பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடுரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது?, படிப்பிற்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா?, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததற்கு கூலி தொழிலா கடைசி வரைக்கும்?, படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா? என பல்வேறுப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Trending Posts