
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபதுக்கு இருபது மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
கண்டி பல்லேகல மற்றும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்குகளில் குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதன்படி இருபதுக்கு 20 தொடருக்கான இந்திய அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியாவும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் தலைவராக கே.எல்.ராகுலும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்த தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணத்தினால் குறித்த தொடரிலிருந்து வெளியேறுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.