எல்லோருக்கும் கடினமான ஒரு காலம் வரும்: வனிந்து ஹசரங்க

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

ஒரு விளையாட்டு வீரனாக வெளியிலிருந்து வரும் சவால்கள் விளையாட்டிற்கு இடையூறாக இல்லாமல் தன்னால் முடிந்ததை அணிக்காகத் தொடர்ந்தும் செய்வேன் என இலங்கை அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். 
 
லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (15) இடம்பெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கெதிரான போட்டியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 
அத்துடன் எந்தவொரு விளையாட்டு வீரரும் அவர்களின் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவற்றை தான் ஒவ்வொன்றாக எதிர்கொள்வதாகவும் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் ஒரு வீரனாக என்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் தான் அறிவதாகவும் வனிந்து ஹசரங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Trending Posts