இலங்கையில் இடம்பெறவுள்ள மகளிருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

இலங்கையில் இடம்பெறவுள்ள மகளிருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
 
இதற்கமைய குறித்த தொடரில் பங்கு பற்றவுள்ள அணிகள் இன்றிரவு நாட்டுக்கு வருகைத்தரவுள்ளன.
 
8 அணிகள் பங்குபற்றும் இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
 
குறித்த தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும்.
 
இந்த நிலையில் தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் தொடரின் அனைத்து போட்டிகளையும் பார்வையாளர்கள் இலவசமாகப் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

Trending Posts