குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் பஸ் விபத்து: ஒருவர் உயிரிழப்பு-8 பேர் காயம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் அதிசொகுசு பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்தொன்றும் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்தொன்றுமே இவ்வாறு  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பில் மெல்சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.

Trending Posts