தும்பு ஏற்றிச் சென்ற லொறி தீக்கிரை

முக்கிய செய்திகள் 1

முந்தல் பிரதேசத்தின் மங்கள எளிய - சின்னப்பாடு பிரதான வீதியின் கொத்தாந்தீவு பிரதேசத்தில் தும்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று (18) காலையில் தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமகியுள்ளது.

இதனால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் தடைப்பட்டது.

கொத்தாந்தீவு பிரதேசத்தில் இருந்து இன்று காலை 11.00 மணியளவில் தும்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் உள்ள மின்சார வயரை அறுத்துக் கொண்டு பயணித்த நிலையில் லொறியில் இருந்த தும்பில் திடீரென ஏற்பட்ட தீயினால் தும்பு முழுமையாக எரிந்ததுடன், லொறி பகுதியளவில் எரிந்துள்ளது.

குறித்த தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.

தும்புடன் கூடிய லொறியில் ஏற்பட்ட தீயை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts