தெங்கு செய்கையில் வெள்ளை ஈ பரவலை கட்டுப்படுத்த புதிய தீர்வு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தென்னை மற்றும் இளநீர் பயிர்ச்செய்கையில் பரவும் வெள்ளை ஈ (White Flies) நோயைக் கட்டுப்படுத்த தென்னைக்கு உரமிடுவதே நீண்டகாலத் தீர்வாகும் என இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தென்னைச் செய்கைக்கான உரங்கள் இல்லாததால் வெள்ளை ஈ நோய் அதிகரித்து வருவதாகவும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்துகிறது.

தென்னை மற்றும் இளநீர் மரங்கள் உரம் இல்லாததால் நலிவடைந்துள்ளதாகவும், ஆனால் உரத்தில் உள்ள பொட்டாசியம் இரசாயனத்தால், தென்னை மற்றும் இளநீர் மரங்களின் இலைகள் மற்றும் கிளைகள் வலுவடைந்து, வெள்ளை ஈ நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதில் சாதகமான விளைவை ஏற்படுத்துவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.

Trending Posts