மின் கம்பத்தில் மோதி லொறி விபத்து – இருவர் காயம்

முக்கிய செய்திகள் 1

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில் யாலபோவ பகுதியில் நேற்று (18) வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில் பயணித்த சிறிய லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது லொறியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending Posts