ஐக்கிய இராச்சியத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், கொழும்பு 02 பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடத்தி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர், ஐக்கிய இராச்சியத்தில் ஆசிரியர் உதவியாளர் மற்றும் உணவகங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து 40 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலங்கமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று (19) கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.