
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை இன்றைய தினம் மேற்கொண்ட கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் பனிமணையில் துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவதானம் செலுத்தியுள்ளார்.
மேற்படி சந்திப்பில் மாவட்ட அரச அதிபர் , மாவட்டத்தின் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கடற்தொலில் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்திருந்தனர்.