
இந்தியா - குஜராத் மாநிலத்தின் வதோத்ராவில் தனியார் பாடசாலை ஒன்றின் வகுப்பறை இடிந்து விழும் காணொளி வௌியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்தில் 7 மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பாடசாலையின் முதல் தளத்தில் உள்ள வகுப்பறை ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
மாணவர்கள் மதிய நேர உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.