
யாழ்ப்பாணம் மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் கடமை நேரத்தில், அவர்களின் உடமைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக அறையொன்றினுள் 09 பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வழமை போன்று நேற்றைய தினமும் (19) பணியாளர்கள் தமது உடமைகள் மற்றும் நகைகளை பெட்டகத்தினுள் வைத்து பூட்டிவிட்டு, கடமைகளுக்கு சென்றிருந்தனர்.
பணியாளர்கள் கடமை முடிந்து வந்து பார்த்தபோது, பெட்டகங்கள் உடைக்கப்பட்டு, பணியாளர்களின் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பணியாளர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.