கடற்றொழிலுக்குச் சென்ற 2 மீன்பிடி படகுகள் மாயம்!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற 2 மீன்பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகங்களிலிருந்து புறப்பட்டுச் சென்ற படகுகளே காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில் 4 மீனவர்களும், ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் இரண்டு மீனவர்களும் பயணித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள மீனவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த மீனவர்களைத் தேடும் பணிகளைக் கடற்படையினர் முன்னெடுத்துள்ளதாகக் கடற்படையினர், தொடர்புடைய ஏனைய அதிகாரிகளுடன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

Trending Posts