அசங்க அபேயகுணசேகரவுக்குப் பிணை

முக்கிய செய்திகள் 1

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேயகுணசேகர பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரிப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கு ஒகஸ்ட் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் வெளியிடப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமைய, அசங்க அபேயகுணசேகர கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதலில் விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் பொலிஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் இன்று காலை தோஹாவில் இருந்து இலங்கை திரும்பிய போதே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts