நாட்டில் மீண்டும் மழை

செய்திகள் முக்கிய செய்திகள் 3

எதிர்வரும் 27ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவா, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் காலி போன்ற மாவட்டங்களில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமென்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், மழையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.