வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த கங்குவா படம் வெளியாகிறது.
கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
படத்தை பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. கங்குவா படத்தின் இறுதி காட்சியில் நடிகர் கார்த்தி நடித்து இருப்பதாக படக்குழு கூறியுள்ளது. இதனை பாடலாசிரியர் விவேகா சமீபத்தில் நடந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார், அதில் அவர் கார்த்திக்கு எதிரான கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார், ஆனால் இருவரும் இணைந்து ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் மிக ஆவலாக காத்து இருக்கின்றனர்.
தற்பொழுது கங்குவா திரைப்படத்தில் ஒன்றாக நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.