எதிர்க்கட்சி தலைவர் சஜித் – பங்காளிக் கட்சி தலைவர்கள் அவசர சந்திப்பு!

முக்கிய செய்திகள் 2

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி எதிர்வரும் 8 ஆம் திகதி மலரவுள்ளதுடன், அன்று புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

எனவே, குறித்த உடன்படிக்கை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே குறித்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.