மரண வீடொன்றில் மோதல் – ஒருவர் பலி

முக்கிய செய்திகள் 1

மாத்தறை – கந்தர – தலல்ல பகுதியில் மரண வீடொன்றில் இரு தரப்பினருக்கு இடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் 19 வயதான இளைஞர் ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

தனிப்பட்ட விரோதமே மோதலுக்கான காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது.