இஸ்ரேல் விவசாயத்துறையில் பணிபுரியச் செல்லும் 21 இலங்கை தொழிலாளர்கள்

முக்கிய செய்திகள் 2

இஸ்ரேல் விவசாயத்துறையில் பணிபுரியச் செல்லும் 21 இலங்கை தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் விமானப் பயணச்சீட்டு வழங்கப்பட்டது.

இஸ்ரேலின் விவசாயத்துறையில் பருவகால அடிப்படையில் பணிபுரிந்த 8 தொழிலாளர்களும் 13 புதிய தொழிலாளர்களும் இவ் வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒரு சிலர் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இதன்படி, இந்த 21 பேருடன் இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிபுரியச் செல்லும் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,163 எனவும், எதிர்வரும் வாரங்களில் 8 பேர் இஸ்ரேலில் விவசாயப் பணிக்கான தகைமைகளைச் சரிபார்ப்பதற்கு அழைக்கப்படவுள்ளனர்.