எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தினால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான அனைத்து விசாரணை அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் சுற்றுச்சூழலுக்கும், மீனவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.