குளவிக் கொட்டுக்கு இலக்கான 35 மாணவர்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிண்ணியா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் சுமார் 35 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 
 
குளவிக் கொட்டுக்கு இலக்கான அனைவரும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
அவர்களில் 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனையோர் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.