அநுராதபுரத்தில் சொகுசு பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: பெண் பலி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அநுராதபுரம், நொச்சியாகம நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (30) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் பயணித்த சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.