ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் ஆரம்பம்!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாடளாவிய ரீதியில் பொலிஸ் பிராந்திய மட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தற்போது தேர்தல் பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய பாதுகாப்பு செயற்பாடுகளை ஒழுங்குசெய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு கடமைகளில் அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.