ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆர்சிபி-யை Unfollow செய்ததால் அவர் அணியை விட்டு வெளியேறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய அவர் கடுமையாக சொதப்பினார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சில போட்டிகளில் இருந்து அவரே வெளியேறுவதாக தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்கும் மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறார் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், ஆர்சிபி அணி ஐபிஎல் 2024 சீசனில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்சிபி அணியை Unfollow செய்துள்ளார். இதன்மூலம் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2025-யில் புதிய உரிமைக்காக விளையாட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அடுத்த சீசனில் ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே தக்கவைக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.