92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.

ஜனாதிபதியை சந்தித்து இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை உறுதிப்படுத்தியதாக குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியாக களமிறங்க தீர்மானித்துள்ள நிலையில் அதனை மீறி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.