
இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக சரித் அசலன்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் 16 வீரர்கள் கொண்ட குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் பதவி வகித்தார்.
இலங்கை குழாத்தில் சரித் அசலன்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, அக்கில தனஞ்சய, டில்ஷான் மதுஷன்க, மதீஷ பத்திரண, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெறுகின்றனர்.