இரத்தினபுரியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பாடசாலை நேரத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தோட்ட பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் நிவித்திகல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவன் நிவித்திகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த தாக்குதல் தொடர்பில் நிவித்திகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றதுடன் சந்தேக நபர்கள் நாளை (31) புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.