ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக, அது மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளது.
கட்சியிலிருந்து விலகிச் செல்லும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்குப் பதிலாக புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணும் வகையில் இதன்போது பல தீர்மானங்கள் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.