நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பதுளை பிரதேச செயலாளர் பிரிவின் இலுக்தன்ன கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 164 குடும்பங்கள் கடுமையான குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் 164 குடும்பங்களைச் சேர்ந்த 656 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பௌசர்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அனைத்து மக்களுக்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலுவலகம் அல்லது மாவட்ட அனர்த்த நிவாரண நிலையம் பதுளையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
எனவே, எவரேனும் இவ்வாறான பிரச்சினையில் பாதிக்கப்பட்டு இருந்தால் மாவட்ட செயலகம் சேவை உத்தியோகத்தர் சஞ்சீவ சமரக்கோனை (தொலைபேசி இலக்கம் 0719456078) தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு மேலும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.